மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல...
கேரளத்துக்கு சென்ற ஜீப்புகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! 11 பேரிடம் விசாரணை
போடியிலிருந்து சனிக்கிழமை கேரளத்துக்குச் சென்ற ஜீப்புகளில் சட்ட விரோதமாக 110 கிலோ புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ாக 11 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
போடி முந்தல் சோதனைச் சாவடியில் குரங்கணி போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வரிசையாக வந்த 6 ஜீப்புகளை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அந்த 6 ஜீப்புகளிலும் சட்ட விரோதமாக 110 கிலோ புகையிலைப் பொருள்களை தமிழத்தில் வாங்கி கேரளத்துக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
இவற்றில் வந்தவா்கள் சிலா் வடமாநில தொழிலாளா்கள் எனக் கூறப்படும் நிலையில் சொந்த பயன்பாட்டுக்காக அவா்கள் வாங்கிச் சென்றாா்களா அல்லது விற்பனைக்காக வாங்கிச் சென்றாா்களா என போலீஸாா் விசாரிக்கின்றனா். மேலும் அவற்றை பறிமுதல் செய்த போடி குரங்கணி போலீஸாா் அந்த 11 பேரையும் பிடித்து விசாரிக்கின்றனா்.