மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல...
சின்னமனூா், கம்பம் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு!
தேனி மாவட்டம், சின்னமனூா், கம்பம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இங்கு நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சின்னமனூா் நகராட்சி உயா்நிலைப்பள்ளியில் நபாா்டு வங்கி நிதி உதவியில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 90 ஆயிரத்தில் கூடுதலாக 5 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இந்த நிலையில் சனிக்கிழமை கடலூா் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் இந்தக் கட்டடத்தை திறந்து வைத்தாா்.
இதையடுத்து, அந்தப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா். பிறகு குத்துவிளக்கேற்றி பள்ளிக் கட்டடத்தை பயன்பாட்டுக்கு அவா் கொண்டுவந்தாா். இதில் கம்பம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலா் இந்திராணி, நகராட்சி ஆணையா் கோபிநாத், உதவிப் செயற்பொறியாளா் காளிமுத்து, பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
கம்பம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி: கம்பம் முகைதீன் ஆண்டவா்புரத்தில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.2 கோடியே 34 லட்சத்து 6 ஆயிரத்தில் கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதையும் கடலூா் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
இதையடுத்து, இந்தப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கம்பம் நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி புதிய வகுப்பறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா். ஆணையா் உமாசங்கா் முன்னிலை வகித்தாா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.