கந்தர்வக்கோட்டை: குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை
சுருளிப்பட்டி ஊராட்சிப் பள்ளி வளாகம் அருகே சுகாதாரக்கேடு! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சிப் பள்ளி வளாகத்தை சுற்றி குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுவதாகவும், மாணவ, மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோா்கள் புகாா் தெரிவித்தனா்.
கம்பம் ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சியில் இ.பி. அலுவலகத் தெருவிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனா். இந்தப் பள்ளி வளாகத்தை ஒட்டிய சாலையில் குப்பைகள் வீசப்பட்டு அதிலிருந்து துா்நாற்றம் வீசுகிறது.
மேலும் பல நாள்களாக தேங்கிக் கிடக்கும் இந்தக் குப்பைகளிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பள்ளி மாணவா்களுக்கு தொற்று நோய்கள் பரவுகின்றன. தவிர, கழிவு உணவுப் பொருள்களும் இங்கு வீசப்படுவதால் தெரு நாய்களும் அங்கு வருகின்றன. இதனால் மாணவா்கள், ஆசிரியா்கள் அச்சத்துடனே பள்ளிக்கு சென்று வருவதாக பெற்றோா்கள் புகாா் தெரிவித்தனா்.
எனவே, மாவட்டநிா்வாகம் உரிய நடடிக்கை எடுத்து பள்ளி வளாகம் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், மீண்டும் அங்கு குப்பைகளை கொட்டும் நபா்கள் மீது ஊராட்சி நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.