செய்திகள் :

லிப்ஸ்டிக் சட்னி டு தொட்டாச்சிணுங்கி கூட்டு- அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்களால் கமகமத்த சென்னை

post image

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2் தென் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் நடந்து முடிந்த நிலையில் 12-வது இடமாக தென் சென்னையில் நடைபெற்றது.

சாந்தோம் கம்யூனிட்டி சென்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என மொத்தம் 111 பேர் கலந்துகொண்டனர்.

சக்தி மசாலா, எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சிஸ், அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், லலிதா ஜுவல்லரி, மில்கி மிஸ்ட், சௌபாக்யா, ஜோஷ் இணைந்து நிகழ்ச்சியை நடத்தின.

முதல் கட்டமாக போட்டியாளர்கள் இரண்டு குழுவாக பிரிந்து தாங்கள் சமைத்ததை நடுவர் செஃப் தீனாவின் முன் காட்சிப்படுத்தினர்

கதம்ப இட்லி, பனங்கிழங்கு குலாப் ஜாமூன், லிப்ஸ்டிக் சட்னி, மாப்பிள்ளைச் சம்பா கொழுக்கட்டை, வாட்டர்மெலன் கேரட் ரசம், இளநீர் சில்லி ஃப்ரை, ஆவாரம், செம்பருத்தி, தாமரை மலர்கள் கொண்டு செய்த மலர்பானம், கறுப்பு எள் இறால் கிரேவி, தாமரை விதை புலாவ், பூசணிவிதை கீர்,வெந்தயக் கீரை நக்கட்ஸ், கருப்பட்டி கஞ்சி, கேழ்வரகு புட்டிங், கொரியன் பொட்டேட்டோ பால்ஸ், சப்பாத்தி, மாந்தளிர் கொய்யா துவையல் என குமரிமுனையில் தொடங்கி கொரியா வரையுள்ள உணவு வகைகளை சமைத்து அசத்தினர். பெரியோர் மத்தியில் சிறுவனாக நெருப்பில்லாமல் சமைக்கும் No oil, No boil முறையில் ரோஜா குதிரைவாலி பாயாசம் செய்து மிரளவைத்தார்.

இதில் முந்திரி கேக் செய்த லலிதா வெங்கட்ராமன், மாலிக்குலர் காஸ்ட்ரோனாமி மூலம் உணவுகளை படைத்த மோகனா ஜெகதீசன், கம்பு களி மற்றும் கூழ் செய்த சாந்தி, வல்லாரை குழம்பு செய்த சாந்தி ராஜேந்திரன், மருந்து குழம்பு செய்த சகாயராணி, கல்யான கொத்சு மற்றும் உப்மா கொழுக்கட்டை செய்த பிரியா ராமகிருஷ்ணன், வெற்றிலை பாயாசம் செய்த சோனியா, நெல்லிக்காய் பொரியல் செய்த கோகிலவாணி, புளியங்கொட்டை பாயாசம் செய்த கலைச்செல்வி, பனங்கிழங்கு குலாப்ஜாமூன் செய்த சாந்தினி என மொத்தம் 10 பேர் அடுத்த கட்டத்துக்கு தேர்வாகினர்.

இவர்களில் மோகனா ஜெகதீசன், சாந்தி மற்றும் கலைச்செல்வி

ஆகியோர் சிறப்பான சமையலுக்காக தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடக்கவுள்ள " சமையல் சூப்பர் ஸ்டார் -சீசன் 2 "வின் இறுதி சுற்றில் பங்கேற்க உள்ளனர்.

இறுதிகட்ட போட்டி சென்னை கொளத்தூரி்ல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

Health: தெரியாத கீரை; ஆனால், சாப்பிட வேண்டிய கீரை அது... ஏன் தெரியுமா?

நாம் அறியாத அரிய வகைக் கீரைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றில் ஒன்று சுக்கான் கீரை. மருத்துவக் குணங்கள் நிறைந்த சுக்கான் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. குடல்புண் குணமாகும். மலச்சிக்கல... மேலும் பார்க்க

புதுச்சேரி: அரங்கில் அணிவகுத்த பரம்பர்ய உணவுகள் - சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் முந்திய 3 ராணிகள்

பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழியாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் ... மேலும் பார்க்க

பறவை கூடு சூப்; உலகிலேயே காஸ்ட்லி; பருக ஆர்வம் காட்டும் மக்கள்; என்ன காரணம்?

உலகெங்கிலும் உள்ள உணவுப் பழக்கவழக்கங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறுவதில்லை. சில உணவுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழைமையானயானதாக இருக்கும், சில உணவுகள் விலை உயர்ந்ததாக இருக்கும்.அப்படி இங்கு பறவையின்... மேலும் பார்க்க

Dates: பேரீச்சம் காய், பாய், பழம்... ஆரோக்கிய பலன்கள் என்னென்ன..?

பேரீச்சம்பழத்துக்கு, சித்த மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் சிறப்பான இடம் உண்டு. பேரீச்சம்பழம், பித்தத்தைப் போக்கும்; தாகத்தைத் தணிக்கும். நாக்கில் ஏற்படும் பாதிப்பால் தோன்றும் சுவையின்மைப் பி... மேலும் பார்க்க

Apple: ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் ஆப்பிள்கள்தான் தரமானதா? அதிக விலைக்கு வாங்கும் மக்கள்; உண்மை என்ன?

பொதுவாக பழக்கடைகளில் அல்லது சந்தைகளில் ஆப்பிள் அல்லது சில பழங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள்கள் தான் தரம் வாய்ந்தது என்று எண்ணி அதனை மக்கள் அதிக... மேலும் பார்க்க

கோதுமை ரவை பிரியாணி, கருப்பட்டி அப்பம்; ‘அவள் கிச்சன்’ சீசன் 2 - ருசிகர சமையல் போட்டி

திருநெல்வேலியில் நடைபெற்ற அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கிய "சமையல் சூப்பர் ஸ்டார்" சீசன் 2 பெரும் கோலாகலத்துடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்வில் திருநெல்வேலி, தென்காசி, மதுரை உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க