தமிழகத்தில் பிப். 25 முதல் மழை!
தமிழகத்தில் பிப். 25 முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக பிப். 25 முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா: பிப்.26-ல் தொடக்கம்!
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
23-02-2025 மற்றும் 24-02-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
25-02-2025 முதல் 01-03-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.