செய்திகள் :

சாம்பியன்ஸ் கோப்பை- இந்தியா பந்துவீச்சு

post image

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா முதலில் பந்து வீசுகிறது.

துபை மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்ங்கை தேர்வு செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.

அதேநேரத்தில், தொடக்க ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டு துவண்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி ஆட உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டதற்கு பதிலடி தரும் முனைப்பில் இந்திய அணி இன்று களம் கண்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடாததால், ஹைபிரிட் முறையில் துபையில் இந்திய ஆட்டங்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை!

இந்திய அணியின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

2-வது டி20: ஜிம்பாப்வேவுக்கு 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்ட... மேலும் பார்க்க

பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி; 241 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக ஐசிசி விருதுகளை பெற்றுக் கொண்ட ஜஸ்பிரித் பும்ரா!

இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுக் கொண்டார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்த... மேலும் பார்க்க

இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்

இந்திய அணியை பாகிஸ்தான் எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பேசியுள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்ட... மேலும் பார்க்க

எனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன்: ஹார்திக் பாண்டியா

தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸிலிருந்து மீண்டும் மும்பை அணியில் ஹார்திக் பா... மேலும் பார்க்க