செய்திகள் :

Dates: பேரீச்சம் காய், பாய், பழம்... ஆரோக்கிய பலன்கள் என்னென்ன..?

post image

பேரீச்சம்பழத்துக்கு, சித்த மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் சிறப்பான இடம் உண்டு. பேரீச்சம்பழம், பித்தத்தைப் போக்கும்; தாகத்தைத் தணிக்கும். நாக்கில் ஏற்படும் பாதிப்பால் தோன்றும் சுவையின்மைப் பிரச்னைக்கு, இது ஒரு நல்ல நிவாரணி. மேலும், நாள்பட்ட மலச்சிக்கலையும் தீர்க்கும். பல மருத்துவக் குணங்களைக்கொண்ட பேரீச்சையின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறார், கோவை கிணத்துக்கடவு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவர் சசிகலா.

பேரீச்சை

பேரீச்சம்பழத்தில் ஈயம், இரும்புச் சத்துக்கள் அதிகம். வளரும் குழந்தைகளுக்கும் இளம்பெண்களுக்கும் மிகவும் நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக் கொள்வதால், இரும்புச் சத்தை எளிதாகப் பெறலாம். பேறுகாலப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு நல்லதோர் இயற்கை மருந்து.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், ரத்தக்குழாய்கள் வலுப்பெற்று, ரத்த அழுத்தம் சீராகும். அனீமியா என்ற ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள், பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், விரைவில் குணம் பெறலாம். மேலும் உடலில் ரத்தம் குறைந்தவர்களுக்கு, ரத்த விருத்தி செய்ய உதவுகிறது. உடல் மெலிந்தவர்கள் பேரீச்சம்பழத்தை உண்பதால், நல்ல பொலிவான தேகம் பெறலாம். மாரடைப்பு உள்ளவர்களுக்கு, பேரீச்சம்பழம் மிகவும் நல்லது. இதயத்தசை வலுப்பெற உதவும். ஏற்கெனவே பருமனான தேகம் உடையவர்கள் மற்றும் நீண்ட நாள் செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது உடலை இளைக்க விடாது.

பேரீச்சை

பேரீச்சம்பழத் தேனூறல்

தினமும் பேரீச்சம்பழத்தை அரைத்து, பாலுடன் கலந்து அருந்தலாம். தேனில் ஊறவைத்து, தினமும் காலை வெறும் வயிற்றில் மற்றும் இரவு உணவுக்குப் பிறகு என 48 நாள்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் நல்ல வலிமையும் பொலிவும் பெறும்.

பேரீச்சைக் காயும்... பாயும்!

பேரீச்சை மரத்தின் காயும் பழமும் உணவாகப் பயன்படுகின்றன. இந்த மரத்திலிருந்து செய்யப்படும் பாய்க்கு, ஈச்சமரப் பாய் என்று பெயர். ஈச்சமரப் பாயில் தூங்கினால், வாத நோய்கள் வராது. வயிற்றுப்புண் வராமல் தடுக்கும். பேரீச்சம் காய், சிறந்த உமிழ் நீர் பெருக்கியாகவும், பசியைத் தூண்டும் பொருளாகவும் பயன்படுகிறது. பேரீச்சை மரத்தின் குருத்து கப நோய்களையும் தீர்க்கும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Apple: ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் ஆப்பிள்கள்தான் தரமானதா? அதிக விலைக்கு வாங்கும் மக்கள்; உண்மை என்ன?

பொதுவாக பழக்கடைகளில் அல்லது சந்தைகளில் ஆப்பிள் அல்லது சில பழங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள்கள் தான் தரம் வாய்ந்தது என்று எண்ணி அதனை மக்கள் அதிக... மேலும் பார்க்க

கோதுமை ரவை பிரியாணி, கருப்பட்டி அப்பம்; ‘அவள் கிச்சன்’ சீசன் 2 - ருசிகர சமையல் போட்டி

திருநெல்வேலியில் நடைபெற்ற அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கிய "சமையல் சூப்பர் ஸ்டார்" சீசன் 2 பெரும் கோலாகலத்துடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்வில் திருநெல்வேலி, தென்காசி, மதுரை உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க

Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!

ஓமவல்லிப் பச்சடி கற்பூரவல்லிதேவையானவை: ஓமவல்லி (அல்லது) கற்பூரவல்லி இலை - கைப்பிடி அளவு, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 1, மிளகு - 5, சீரகம், பெருங்காயம், உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், தே... மேலும் பார்க்க

விழுப்புரம்: அரங்கத்தை கட்டிப் போட்ட மணம்! - சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தேர்வான 3 அரசிகள்

பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழியாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களை திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் இண... மேலும் பார்க்க

சங்குப் பூ துவையல், பனை ஓலை கொழுக்கட்டை...விழுப்புரத்தில் களைகட்டிய சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி!

முதல் போட்டி மதுரையிலும், இரண்டாவது போட்டி தஞ்சாவூரிலும், மூன்றாவது போட்டி திருச்சியிலும், நான்காவது போட்டி ராமநாதபுரத்திலும், ஐந்தாவது போட்டி காரைக்குடியிலும் நடைபெற்ற நிலையில் ஆறாவது போட்டி விழுப்பு... மேலும் பார்க்க

Fake vs Real: போலி பாதாமை கண்டறிவது எப்படி?

தரக் குறைவான பாதாம் அல்லது பாதாமே இல்லாத ஆப்ரிகார்ட், பீச் விதகைகளை சாயம் பூசி பாதாம் என விற்பனை செய்வது பெருகி வருகிறது.தரமான பாதம்களிலிருந்து இவற்றைக் கண்டறிவதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.வடிவம்த... மேலும் பார்க்க