குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
Fake vs Real: போலி பாதாமை கண்டறிவது எப்படி?
தரக் குறைவான பாதாம் அல்லது பாதாமே இல்லாத ஆப்ரிகார்ட், பீச் விதகைகளை சாயம் பூசி பாதாம் என விற்பனை செய்வது பெருகி வருகிறது.
தரமான பாதம்களிலிருந்து இவற்றைக் கண்டறிவதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.
வடிவம்
தரமான பாதாம் ஒருபக்கம் லாவகமான அரைவட்டமாகவும் மறுபக்கம் கூர்மையான முனையுடனும் இருக்கும். போலியான பாதாம் சரியான முறையான வடிவில் இருக்காது, மிகவும் பளபளப்பாக காணப்படும்.
நிறம்
சரியான பாதாம் லேசான பழுப்பு அல்லது பீஜ் நிறத்தில் இருக்கும். போலி பாதாம் கண்ணைக் கவரும்படி, இயற்கைக்கு மாறான நிறத்தில் இருக்கும் இதற்கு காரணம் வேதிப் பொருட்களால் நிறமேற்றப்படுவதுதான். இந்தவகையில் நிறமேற்றப்பட்டிருந்தால் அதை வெள்ளை துணியில் தேய்ப்பதன் மூலம் கண்டறியலாம்.
தோல்
பாதாமின் மேற்புறத்தோல் கொஞ்சம் சொரசொரப்பாக இருக்கும். போலி பாதமின் மேற்புறத்தோல் வழவழப்பாக இருக்கும் அல்லது மெழுகு பூசப்பட்டிருக்கும்.
சுவை
நிஜமான பாதாமில் இயற்கையான விதையின் சுவை அதிகாமாக இருக்கும். போலி சுவையற்றதாக அல்லது அதிக இனிப்பாக இருக்கும்.
விலை
பாதாம் விளைவித்தல், தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செலவுகள் அதிகம் என்பதால் நம்பமுடியாதபடி குறைந்த விலையில் கிடைக்கும் பாதாம்களை சோதித்துப்பார்க்க வேண்டியது அவசியம். அதேவேளையில் அதிக விலைக்கு வாங்குவதனால் மட்டுமே பாதாம் தரமானதாக இருக்காது.
சோதனை
பாதாம்களை தண்ணீரில் போடும்போது பாதாமின் மேல ஏதாவது பூசப்பட்டிருந்தால் அது மிதக்கும். நிஜமான பாதாம் விதை மூழ்கும்.
செயற்கையாக நிறமேற்றப்பட்ட பாதாம் தண்ணீரில் நிறத்தைக் கலக்கும்.
தொடர்ந்து பாதாம் சாப்பிடுபவர்கள் தங்கள் உள்ளுணர்வினாலேயே போலியை அறியமுடியும். விலை உயர்ந்த உணவுப்பொருள்களை வாங்கும்போது நம்பகத்தன்மையான கடைகளில் வாங்குங்கள்.
பாக்கெட்களில் வாங்கும்போது தர உத்தரவாத சான்றிதழ்கள் இருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள். இந்த தகவல்கள் பல்வேறு ஊடகங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை.