தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆ...
கண்பார்வையை இழந்த ஆஸ்கர் நாயகி!
ஜேம்ஸ்பாண்ட் நடிகை ஜூடி டென்ச் கண்பார்வையை இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ‘எம்’ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற இங்கிலாந்து நடிகை ஜுடி டென்ச் (91), தனது கண்பார்வை இழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். இவர், 1998 ஆம் ஆண்டில் வெளியான ஷேக்ஸ்பியர் இன் லவ் படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றவர்.
இவர் ஸ்கை ஃபால், ஸ்பிரிட்டட், சிக்ஸ் நைட்ஸ் டூ மிட்நைட், கோல்டன் ஐ, கேட்ஸ், ஆல் இஸ் ட்ரூ முதலான பல படங்களில் நடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டிலேயே கண்பார்வை மெதுவாக இழந்து வருவதாக ஜூடி கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜூடி ’’நான் கண்பார்வையை இழந்து விட்டேன். இதனால், படங்களில் நடிக்கவில்லை. யாரேனும் ஒருவரின் துணையில்லாமல் என்னால் தனியாக எங்கும் செல்ல முடியாது. எனக்கு துணையாக ஒருவர் எப்போதும் இருக்க வேண்டும்; இல்லையென்றால், விழுந்து விடுவேன்’’ என்று கூறினார்.
இதையும் படிக்க:கவனக் குறைபாட்டு பெண்களைவிட ஆண்களுக்கு குறைவான ஆயுள்!