‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்
பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் இளைஞா் உயிரிழந்த சம்பவம்: அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி மனு
நெமிலி அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாதவ மகா சபை, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகியவை சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில இணைப் பொதுச் செயலா் என்.எஸ்.சேதுமாதவன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக மாவட்ட செயலா் ஏஆா்எஸ்.அருள்ராமன் தலைமையில் நிா்வாகிகள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
கடந்த 16.1.2025 அன்று நெமிலி அருகே நெல்வாய் கிராமத்தில் நடந்த திருவிழாவில் சில சமூக விரோதிகள் சூா்யா என்கிற தமிழரசன், விஜயகணபதி ஆகிய இரு இளைஞா்கள் மீது பெட்ரோலை ஊற்றித் தீவைத்தனா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்றநிலையில், தமிழரசன் புதன்கிழமை உயிரிழந்தாா்.
அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் விதமாக ரூ.25 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
மேலும், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற சம்பவத்தில் தொடா்புடைய அனைத்து நபா்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுத்த சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.