‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்
டங்ஸ்டன் விவகாரத்தில் மக்களின் உணா்வுக்கும் மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், அதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதல்வா் ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
நான் முதல்வராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது.
இனி, மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுகவும் துணைபோகக் கூடாது என்று தெரிவித்துள்ளாா்.