செய்திகள் :

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

post image

அண்ணாவின் 56ஆவது நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது.

இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு மெரினாவின் அண்ணா சதுக்கத்தை சென்றடைகிறது. வாலாஜா சாலையில் தொடங்கிய பேரணி 1.9 கி.மீ. தூரம் வரை நடைபெறுகிறது.

பேரணிக்குப் பின் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்கிறார்.

இலங்கை கடற்படை அட்டூழியம்: மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது

பேரணியில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி, நாடாளுமன்றம் - சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள்உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக அண்ணா நினைவு நாள் பேரணியையொட்டி, சென்னையில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேங்கைவயல் வழக்கு: குற்றப்பத்திரிகை ஏற்பு! வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில், சிபி-சிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால், வ... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.680 குறைந்து விற்பனையாகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி இன்று (பிப். 3ஆம் தேதி) தங்க... மேலும் பார்க்க

மன்னார்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இரண்டாவது முறையாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன். இவரது வீட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது மர்மநபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்துக்கு நள்ளிரவு சுமார் 12.00 ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்வரத்து 479 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.56 அடியில் இருந்து 110.54 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 491 கனஅடியிலிருந்து வினாடிக்கு ... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை அட்டூழியம்: மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்... மேலும் பார்க்க