செய்திகள் :

யானைகள் தாக்கியதில் வயதான தம்பதி பலி!

post image

ஒடிசா மாநிலம் காலாஹாண்டி மாவட்டத்தில் யானைக் கூட்டம் தாக்கியதில் உறங்கிக்கொண்டிருந்த வயதான கணவன் மற்றும் அவரது மனைவி பலியாகியுள்ளனர்.

காலாஹாண்டியின் கடோமாலி கிராமத்தைச் சேர்ந்த மகுன் மஜ்ஹி (வயது 70) மற்றும் அவரது மனைவி கடா மஜ்ஹி (65) ஆகியோர் வனப்பகுதிக்கு அருகிலுள்ள நிலத்தில் விவசாயம் செய்து வந்ததுள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்.1 அன்று இரவு அவர்களது மண் வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அவர்கள் இருவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள வனப்பகுதியிலிருந்து யானைக்கூட்டம் அவர்களது கிராமத்திற்குள் புகுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த யானைகள் மகுனின் மண் வீட்டை இடித்து தகர்த்ததுடன், உறங்கிக்கொண்டிருந்த மகுன் மற்றும் அவரது மனைவி கடாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலயே பலியானார்கள்.

இதையும் படிக்க: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கு இடையே அவை நடவடிக்கை!

இந்த தாக்குதலில் வீட்டில் அவர்களோடு உறங்கிக்கொண்டிருந்த மகுனின் மகன் மற்றும் 3 சகோதரர்கள் அதிர்ஷடவசமாக உயிர்தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்த அப்பகுதி வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது, இந்த சம்வம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பலியான தம்பதியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, நர்லா மற்றும் பிஸ்வனாத்பூர் வனப்பகுதிகளுக்கு மிக அருகாமையில் அந்த கிராமம் அமைந்துள்ளதால் காட்டு யானைகளின் தாக்குதல் அங்கு அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர், யானைகள் தாக்கியதில் நர்லா வனத்துறை அதிகாரி ஒருவர் உள்பட பலர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிப். 10-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்.10 ஆம் தேதி 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழக பட்ஜ... மேலும் பார்க்க

2025 கிராமி விருதுகள்: இந்திய வம்சவளிப் பெண் வெற்றி!

2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் இந்திய வம்சவளியைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருதின் 67வது விருது வழங்கும் நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கும்பமேளா விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு!

மகா கும்பமேளா விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளி நடப்பு செய்தனர்.மகா கும்பமேளா நெரிசலில் பலி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி: பிப். 8ல் திமுக கண்டன பொதுக்கூட்டம்!

நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மத்திய பாஜக அரசுக்கு எதிராக பிப். 8ல் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

’எஸ்டிஆர் - 50’ தயாரிப்பாளராக களமிறங்கும் நடிகர் சிம்பு!

நடிகர் சிலம்பரசன் தனது 50வது திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.நடிகர் சிம்புவின் 42வது பிறந்தநாளான இன்று (பிப்.3), அவர் நடிக்கும் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் மற்ற... மேலும் பார்க்க

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அண்ணாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி இன்று(பிப். 3) நடைபெற்றது. பேரணிக்குப் பின்... மேலும் பார்க்க