பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலி! குடும்பத்தினர் படுகாயம்!
பிப். 10-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்.10 ஆம் தேதி 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது விவாதிக்கப்படவுள்ளது.
இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜன. 6-ல் கூடியது. இந்த கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறினார்.
தொடர்ந்து, ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெற்று பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.