செய்திகள் :

கோவையில் தனியார் மருத்துவமனை செவிலியருக்கு கத்தி குத்து!

post image

கோவை அவிநாசி சாலையில் உள்ள குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் செவிலியருக்கு கத்தியால் குத்திய சம்பவத்தில், இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் பிரியா என்ற பெண் செவிலியராக பணியாற்றி வருகிறார். மருத்துவமனையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கிப் பணி புரிந்து செவிலியர் பிரியாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் சேர்ந்த சுஜித் என்ற இளைஞருக்கும் காதல் இருந்து வந்து உள்ளது. சுஜித்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால் பிரியா அவருடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் உள்ள பெண்கள் விடுதிக்குள் அனுமதியின்றி உள்ளே நுழைய முயன்ற சுஜித்தை அங்கு பணியில் உள்ள விடுதிக் காப்பாளர் தடுத்து உள்ளார். அவரை கடுமையான வார்த்தைகளில் பேசி உள்ளே சென்ற சுஜித், பிரியாவின் கழுத்தை நெரித்து கத்தியால் குத்த முற்பட்டு உள்ளார். பிரியா தப்ப முயன்ற போது அவரது கைகளில் வெட்டுக் காயம் உண்டானது. இதையடுத்து அங்கு வந்த விடுதிக் காப்பாளர்கள் மற்றும் மருத்துவமனை காவலாளிகள் சுஜித்தை பிடித்து ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து விடுதிக் காப்பாளர் அளித்த புகாரில் பேரில் பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சுஜித்தை சிறையில் அடைத்தனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பிரியாவும், சுஜித்தும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும், பிரியா திடீரென பேசுவதை நிறுத்தியதால் சுஜித் ஆத்திரம் அடைந்து இந்த கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையில் செவிலியரின் குடும்ப பிரச்சனை காரணமாக அவரை அவரது கணவர் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

கைப்பேசி வெடித்து முதியவா் காயம்

சாா்ஜ் போட்டபடியே பேசிக்கொண்டிருந்த கைப்பேசி வெடித்ததில் முதியவா் காயமடைந்தாா். கோவை, போத்தனூா் வண்ணாரப்பேட்டை வீதியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (64). இவா், தனது கைப்பேசியை சனிக்கிழமை இரவு சாா்ஜ் போட்டி... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: சிறுவன் உள்பட 2 போ் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்... மேலும் பார்க்க

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: நடிகை ராதிகா சரத்குமாா்

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நடிகை ராதிகா சரத்குமாா் தெரிவித்தாா். கோவை வெள்ளலூரில் பாஜக சாா்பில் மோடி ரேக்ளா திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்,... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, கா... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் பிப்.5 இல் காளான் வளா்ப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 5) காளான் வளா்ப்பு தொடா்பான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், பயிா் நோயியல் ... மேலும் பார்க்க

நகைப்பட்டறை உரிமையாளரிடம் ரூ.81 லட்சம் மோசடி: ரூ.20 லட்சம் மீட்பு!

நகைப்பட்டறை உரிமையாளரிடம் ரூ.81 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் ரூ.20 லட்சத்தை போலீஸாா் மீட்டனா். கோவை ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்த 54 வயது நபா் நகைப்பட்டறை நடத்தி வருகிறாா். இவா், தனியாா் நிறுவனத்தின்... மேலும் பார்க்க