செய்திகள் :

Abhishek Sharma: ``என் கரியர் முழுக்க செய்ததை 2 மணிநேரத்தில் செய்துவிட்டார்" - அபிஷேக் குறித்து குக்

post image
டி20 கிரிக்கெட்டில் நாளுக்கு நாள் தனது அபார ஆட்டத்தால் இந்திய இளம்படையின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து வருகிறார் அபிஷேக் சர்மா.

ஐ.பி.எல்லில் ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட்டுடன் ஓப்பனிங்கில் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தால் கவனத்தை ஈர்த்த அபிஷேக் சர்மாவுக்கு, கடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான தனது அறிமுக டி20 தொடரிலேயே சதமடித்து அசத்தினார்.

அபிஷேக் சர்மா

அடுத்தடுத்து, வங்காளதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கெதிரான டி20 தொடரில் பெரிதாக ரன் அடிக்கவில்லையென்றாலும், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜனவரி 22-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே 34 பந்துகளில் 8 சிக்ஸர், 5 பவுண்டரிகள் என 79 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார்.

அபிஷேக் சர்மா

அதைத்தொடர்ந்து, அடுத்தடுத்தப் போட்டிகளில் சற்று தடுமாறிய அபிஷேக் சர்மா, நேற்று மும்பையில் நடைபெற்ற இந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார். 37 பந்துகளில் சதமடித்து மொத்தமாக 53 பந்துகளில் 13 சிக்ஸர், 7 பவுண்டரிகள் என 135 ரன்கள் குவித்தார். அதோடு, இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மேலும், இந்த சதத்தின் மூலம் இங்கிலாந்துக்கெதிராக அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் அபிஷேக் சர்மா படைத்தார்.

இந்த நிலையில், தன்னுடைய கரியர் முழுக்க தான் செய்ததை அபிஷேக் சர்மா இரண்டே மணிநேரத்தில் செய்துவிட்டதாக இங்கிலாந்தின் லெஜெண்ட் பேட்ஸ்மேன் அலெஸ்டர் குக் பாராட்டியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த வீரர்களின் எலைட் லிஸ்டில் 12,472 ரன்களுடன் ஆறாவது இடத்தில் இருக்கும் அலெஸ்டர் குக், ஒயிட் பால் கிரிக்கெட்டில் (92 ஒருநாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள்) மொத்தமாகவே 10 சிக்ஸர் மட்டுமே அடித்திருக்கிறார்.

Alastair Cook

இப்படியிருக்க, அபிஷேக் சர்மாவின் நேற்றைய இன்னிங்ஸைப் பாராட்டிய அலெஸ்டர் குக், ``என்னுடைய கரியர் முழுக்க நான் அடித்த சிக்ஸர்களைவிட அதிக சிக்ஸர்களை இரண்டே மணிநேரத்தில் அபிஷேக் சர்மா அடித்திருக்கிறார்." என்று புகழ்ந்திருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை, 17 டி20 போட்டிகளில் போட்டிகள் மட்டுமே விளையாடியிருக்கும் அபிஷேக் சர்மா 2 சதங்கள், 41 சிக்ஸர் உட்பட 535 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ICC U19: `என்னுடைய அப்பா எடுத்த அந்த முடிவுதான் நான் இங்கே நிற்க காரணம்' -தமிழக வீராங்கனை கமலினி

மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையே நேற்று (பிப்ரவரி 3) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அ... மேலும் பார்க்க

INDvENG: "தோல்வி வருத்தம்தான்; ஆனாலும் T20-யில் நான் பார்த்து வியந்த பேட்டிங்..." - பாராட்டிய பட்லர்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.இந்தத் தொடரின் கடைசிப் போட்டி நேற்று( பிப்ரவரி 1) மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று... மேலும் பார்க்க

``வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் முக்கியம்; கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல" - அஸ்வின் அதிரடி

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ஆடிய இரண்டு டெஸ்ட் தொடர்களில் அடைந்த மோசமான தோல்வி, சீனியர் முதல் ஜூனியர் வரை இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களையும் ரஞ்சி டிராபியில் விளையாடும் கட்டாய நிலைக்குத... மேலும் பார்க்க

Kohli: "உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன்" - க்ளீன் போல்டாக்கிய ரஞ்சி வீரரிடம் கோலி கூறியதென்ன?

`மாடர்ன் கிரிக்கெட்டின் ரன் மெஷின்' என்றழைக்கப்படும் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, ஜனவரி 30-ம் தேதியன்று ரயில்வேஸ் அணிக்கெதிரான ரஞ்சி டிராபியில் களமிறங்கினர்.கோலியின் வருகையால் டெ... மேலும் பார்க்க

Abhishek Sharma: `37 பந்துகளில் சதம்' - இங்கிலாந்து Ex பிரதமர் முன்னிலையில் அதிரடி காட்டிய அபிஷேக்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ... மேலும் பார்க்க

U19 Women's T20 World Cup: மீண்டும் சாம்பியன்... தென்னாப்பிரிக்காவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகுடம் சூடியிருக்கிறது இந்திய மகளிர் அணி.மல... மேலும் பார்க்க