பல மொழி சின்னதிரைகளில் நடிப்பது சிறந்த அனுபவம்: செளந்தர்யா ரெட்டி!
ICC U19: `என்னுடைய அப்பா எடுத்த அந்த முடிவுதான் நான் இங்கே நிற்க காரணம்' -தமிழக வீராங்கனை கமலினி
மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையே நேற்று (பிப்ரவரி 3) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் 143 ரன்கள் எடுத்து அனைவரையும் கவனத்தையும் தன்பக்கம் திருப்பி இருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த கமலினி.
உலகக் கோப்பைத் தொடரில் வென்ற பிறகு பேசிய கமலினி, “என்னுடைய அண்ணனைப் பார்த்துதான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். அண்ணன் கூட நிறைய மேட்ச்கெல்லாம் விளையாடச் செல்வேன். அங்கு எல்லோரையும் பார்க்கும்போது உத்வேகமாக இருந்தது. என்னாலும் கிரிக்கெட் விளையாட முடியும் என்று நினைத்தேன்.
என் அப்பாவிடம் கேட்கும்போது அவரும் ஓகே சொல்லிவிட்டார். எனக்கு இடது கையில் பேட்டிங் செய்ய நன்றாக வந்தது. அதனால் என் அப்பா இடது கையிலேயே பேட்டிங் செய் என்றார். அப்போது இருந்துதான் என்னுடைய கிரிக்கெட் பயணம் தொடங்கியது. அதன் பிறகு மதுரையில் இருந்து சென்னைக்கு ஷிப்ட் செய்வோம் என்று அப்பா முடிவு செய்தார்.
எங்க அப்பா எடுத்த அந்த முடிவுதான் நான் இங்கே நிற்க காரணம். மதுரைக்கும் சென்னைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs