Seeman: "பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந...
ஒரே நாடு.. பிரித்துவிடாதீர்கள்: மக்களவையில் கனிமொழி பேச்சு
புது தில்லி: ஒரே நாடு சிதைத்துவிடாதீர்கள் என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப். 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றினர்.
அப்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி. தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்த விவகாரம் குறித்துப் பேசினார்.
ஆனால், அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூடிய விவகாரம் இல்லை என்பதால், அது பற்றி பேசி கனிமொழிக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. பிறகு தனது உரையை முடிக்கும்போது, திராவிட மாடல், பிரித்தாளுவதில்லை, திராவிட மாடல் அனைவரையும் சமமாக நடத்தும். திராவிட மாடல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும். திராவிட மாடலிடம் அனைவரையும் அரவணைத்துச் செல்வது எவ்வாறு என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இது ஒரே நாடு, சிதைத்துவிடாதீர்கள் என்று கூறிவிட்டு உரையை நிறைவு செய்தார்.