செய்திகள் :

பிரதமரை டிரம்ப் ஏன் அழைக்கவில்லை?- மக்களவையில் ராகுல் சர்ச்சைப் பேச்சு

post image

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அமெரிக்கப் பயணம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப். 1 அன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து இன்று(பிப். 3) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "இந்தியாவில் வலுவான அமைப்பு இருந்திருந்தால், 'பிரதமரை அழைக்க வேண்டும்' என்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்கா சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

இதையும் படிக்க | பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி: பிப். 8-ல் திமுக கண்டன பொதுக் கூட்டம்!

இந்தியாவில் உற்பத்தித் துறை வலுவாக இருந்திருந்தால்அந்த தொழில்நுட்பங்களில் நாம் பணியாற்றிக் கொண்டிருந்தால் இந்நேரம் அமெரிக்க அதிபர் இந்தியாவிற்கு வந்து விழாவிற்கு பிரதமரை அழைப்பார்.

'எங்களுடைய பிரதமருக்கு அழைப்புவிடுங்கள்' என்று வெளியுறவுத் துறை அமைச்சரை நாம் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது" என்று கூறினார்.

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

'எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இவ்வளவு தீவிரமான, ஆதாரமற்ற ஓர் அறிக்கையை வெளியிட முடியாது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்பானது. டிரம்ப் விழாவுக்கு பிரதமரின் அழைப்பு குறித்து ஆதாரமற்ற கருத்துகளை கூறுகிறார்' என்று ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினார்.

அதற்கு ராகுல் காந்தி, "உங்கள் மன அமைதியைக் குலைத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிக்க | ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி!

தில்லியில் பிரசாரம் நிறைவு! மும்முனைப் போட்டியில் வெல்வது யார்?

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெற்றது. டிச. 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும் பார்க்க

மகா கும்பமேளா: வசந்த பஞ்சமியையொட்டி 1.25 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் முக்கிய நாளான வசந்த பஞ்சமி புனித நீராடல் இன்று(பிப். 3) நடைபெறுகிறது. வசந்த பஞ்சமி மற்றும் அதற்கு முந்தைய இருநாள்களில... மேலும் பார்க்க

மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி! -ராகுல் காந்தி

‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(பிப். 3) மக்களவையில் குறிப்பிட்டு பேசினார்.அவர் பேசியதா... மேலும் பார்க்க

ஒரே நாடு.. பிரித்துவிடாதீர்கள்: மக்களவையில் கனிமொழி பேச்சு

புது தில்லி: ஒரே நாடு சிதைத்துவிடாதீர்கள் என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் கூறினார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வ... மேலும் பார்க்க

சிறுபான்மையினரைக் காக்கத் தவறிய மத்திய அரசு: மக்களவையில் கனிமொழி

புது தில்லி: நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு தவறிவிட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என்று மக்களவையில் திமுக எம்.பி. க... மேலும் பார்க்க

மரத்தடியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

தலைநகர் தில்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடியுள்ளார். தில்லி தேர்தல் நடைபெற இரண்டு நாள்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகின்றது. மொத்தம... மேலும் பார்க்க