அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்
2024-இல் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள்: மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு கடந்த ஓராண்டில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட விமான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தரப்பில் இன்று(பிப். 3) அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் விமான நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு 714 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் அதிகபட்சமாக இண்டிகோ விமான நிறுவனத்துக்கு 216 விமான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புகார்கள் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.