அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆண்டவன் பெயரால் அரசியல் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு இன்று(பிப். 3) பேசியபோது, “திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இன்றுவரை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 2,504 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தி முடிக்க திட்டம் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இதனைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘ஆண்டவன் பெயரால் அரசியல் செய்வோரிடையே, அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! சிறப்புறப் பணியாற்றிடும் பி. கே. சேகர் பாபு மற்றும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையை வாழ்த்துகிறேன்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.