மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு
திருவாரூா்: திருவாரூா் மாவட்ட புதிய ஆட்சியராக, வி. மோகனசந்திரன், திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியராக இருந்த தி. சாருஸ்ரீ பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநராக இருந்த வி. மோகனசந்திரன் நியமிக்கப்பட் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் இதற்கு முன்னா், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலராகவும், முதல்வா் அலுவலகத்தில் துணை செயலாளராகவும், சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும், கடலூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பணியிடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் வருவாய்க் கோட்டாட்சியராகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளாா்.