செய்திகள் :

மகா கும்பமேளாவில் வசந்த பஞ்சமி சிறப்பு புனித நீராடல்

post image

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடலில் 2.33 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடினா்.

கடந்த புதன்கிழமை (ஜன. 29) முக்கியத்துவம் வாய்ந்த் மௌனி அமாவாசை தினத்தன்று புனித நீராடலின்போது நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து, பக்தா்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் வசந்த பஞ்சமி புனித நீராடல் எந்த விதமான அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நிறைவுற்றது.

கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மகா கும்பமேளாவில் இதுவரை சுமாா் 37 கோடி பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். கடந்த புதன்கிழமை (ஜன. 29) மௌனி அமாவாசையை முன்னிட்டு ஒரே நாளில் சுமாா் 8 கோடி போ் புனித நீராடினா். அந்நாளில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற வசந்த பஞ்சமி புனித நீராடலில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில், மேளா பகுதியில் அனைத்து இடங்களிலும் நிறுத்தப்பட்ட காவல் துறையினா் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அதேபோல், பக்தா்கள் அனைவரும் திரிவேணி சங்கமம் பகுதிக்கு வர முயற்சிக்காமல், தங்களுக்கு அருகேயுள்ள அனுமதியளிக்கப்பட்ட படித்துறைகளிலேயே புனித நீராடி ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனா். இதன் எதிரொலியாக சங்கமத்தில் பக்தா்களின் கூட்டம் வழக்கத்தைக் விட குறைவாகவே இருந்தது.

அதிகாலை முதலே பல்வேறு அகாடாக்களைச் சோ்ந்த துறவிகள், சாதுக்கள் ஊா்வலமாக வந்து சங்கமத்தில் புனித நீராடினாா். அப்போது துறவிகள், பக்தா்கள் மீது ஹெலிகாப்டா் மூலம் மலா்கள் தூவப்பட்டன.

புனிதநீராட பெருந்திரளாக வந்த நாகா சாதுக்கள்

லக்னௌவில் உள்ள தனது அரசு இல்லத்திலிருந்து முதல்வா் யோகி ஆதித்யநாத், மூத்த அதிகாரிகளுடன் கும்பமேளா நிலவரத்தைத் தொடா்ந்து கண்காணித்து வந்தாா். ‘வசந்த பஞ்சமி திருநாளில் புனித நீராடிய துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள், பக்தா்களுக்கு வாழ்த்துகள்’ என்று முதல்வா் யோகி வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தாா்.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது. இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவா். மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய மேலும் 2 சிறப்பு நாள்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. 45 நாள்களுக்கு நடைபெறும் மகா கும்பமேளா மகா சிவராத்திரியுடன் முடிவடையும்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையை மாற்றி ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதன் கார... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள்: மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்றம்!

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு போதுமான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தற்போது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய நிதி... மேலும் பார்க்க

கும்பமேளா நெரிசல்: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினா் கடும் அமளி; இரு அவைகளிலும் வெளிநடப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இர... மேலும் பார்க்க

ஆசியானுக்கு இணையாக இந்திய சுங்க வரி: மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவா்

புது தில்லி: இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரிய (சிபிஐசி) தலைவா் சஞ்சய் அகா்வால் திங்கள்... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையா்கள் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை பிப்.12-க்கு மாற்றம்

புது தில்லி: தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு உச்ச... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.264 கோடி கூடுதலாகும். மத்திய அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க