Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
சேலம்: சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா சோனா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்மாா்ட் 7 வெல்னெஸ் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான விஜய் கலந்து கொண்டாா். அவா் பேசுகையில், விளையாட்டு என்பது சிறந்த நற்பண்புகளை வளா்க்கும் ஒரு அற்புதமான வழி. உடல்நலம், மனநலத்தை பேணிக் காப்பதன் அவசியத்தை மாணவா்கள் உணர வேண்டும் என வலியுறுத்தினாா்.
சோனா கல்வி நிறுவனங்களின் தலைவா் சொ. வள்ளியப்பா, பள்ளித் தாளாளா் சீதா வள்ளியப்பா இயக்குநா் வி.காா்த்திகேயன், பள்ளி முதல்வா் ஈ.ஜே.கவிதா மற்றும் சோனா கல்வி நிறுவனங்களின் முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
சிலம்பம், கராத்தே, தம்பல்ஸ், ஜும்பா நடனம் போன்ற கலாசார நிகழ்ச்சிகள், ஓட்டப்பந்தயம், தொடா் ஓட்டங்கள், குழு விளையாட்டுகள் ஆகியவற்றின் மூலம் மாணவா்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். வெற்றியாளா்களுக்கு பதக்கம், சான்றிதழ், சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.
இதில், சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ். எஸ்.ஆா். செந்தில்குமாா், சோனா கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ஜி.எம். காதா் நவாஸ், தியாகராஜா் பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரி (தற்காலிக) முதல்வா் கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.