செய்திகள் :

`பதவி வேண்டுமா, திமுக வீழ்த்தப்பட வேண்டுமா? முடிவு செய்து கொள்ளுங்கள்’ - டிடிவி தினகரன் சொல்வதென்ன?

post image

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "தமிழகத்தில் ஒரு ஏடிஜிபி-யே புகார் கொடுக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கின் நிலை இருக்கிறது. பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பட்டி தொட்டியெங்கும் போதைப்பொருள் கிடைக்கிறது.

டிடிவி தினகரன்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை. 2004 - 14 வரையிலான திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் சில ஆண்டுகள் தவிர்த்து பெரும்பாலான ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பெயர் குறிப்பிடவில்லை. மத்திய பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒன்று.

திமுக ஆட்சியால் நிதியை சரியான முறையில் கையாள முடியாமல், முதலீடுகளை ஈர்க்க முடியாமல் போனதால் இதுபோன்ற புது புரளியை சில ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். மோடியின் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு.

அண்ணாவுக்கு மரியாதை

நான் குறிப்பிட்டு எந்தக்கட்சியையும் எங்கள் பக்கம் அழைக்கவில்லை. திமுகவை வெல்லக்கூடிய ஆற்றல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமே இருக்கிறது என்ற அடிப்படையில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பொதுவான ஒரு அழைப்பை விடுத்துக் கொண்டிருக்கிறேன்.

திமுகவை எதிர்க்க வேண்டும் என்று நினைக்கின்ற கட்சிகள் தனியாக நின்று வாக்குகளை வீணடிக்காமல், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இது என்னுடைய விருப்பம் மட்டுமே. சம்பந்தப்பட்ட கட்சிகள்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டுமா? திமுக வீழ்த்தப்பட வேண்டுமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`இந்தியா சரியான முடிவெடுக்கும்...' - சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா!

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், தன் நாட்டிலிருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். குவாத்தமாலா, பெரு, ஹோண்டுராஸ் போன்ற நாடுகளுக்கு அமெரிக்காவிலிருந்... மேலும் பார்க்க

`தூங்கும் போதுகூட மக்கள் வரி செலுத்துகிறார்கள்' - முத்தரசன் காட்டம்!

கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதாவது, ``மத்திய பட்ஜெட் நாளில் நிதியமைச்சருக்கு, கு... மேலும் பார்க்க

BJP ஏஜென்ட் TTV? Erode East கிளைமாக்ஸ், Vijay-க்கு 2 Exam! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,ஈரோடு கிழக்கு கிளைமாக்ஸ் வார். பிஜேபி வாக்குகளை எதிர்பார்க்கும் சீமான். அதிமுக புள்ளிகளுக்கு வலை விரிக்கும் திமுக. இன்னொரு பக்கம், பாஜக ஏஜென்டாகவே மாறி விட்டாரா டிடிவி?. தினக... மேலும் பார்க்க

ADGP மீது கொலை முயற்சியா? | வேங்கைவயல்: முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் DMK அரசு? Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* Budget 2025: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் கேள்வி.* 90% பேர் புதிய வருமான வரி விதிப்புக்கு மாற வாய்ப்பு? * வரிச் சலுகைக்கு வழிகாட்டியவர் மோடிதான் - நிர்மலா சீதாரா... மேலும் பார்க்க

`சீனா, OBC, வேலைவாய்ப்பின்மை, தேர்தல் ஆணையர் நியமன விதி, புத்தர்' - மக்களவையில் ராகுல் பேசியதென்ன?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 நிதியாண்டுக்கான ... மேலும் பார்க்க