செய்திகள் :

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! இன்றும் புதிய உச்சம்!!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ. 840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பின்னர் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இந்நிலையில், மக்களவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், தங்கம் விலை குறையும் என்று எதிர்பாா்க்கப்பட்டது.

ஆனால், எந்த அறிவிப்பும் வராததால் சனிக்கிழமை சவரனுக்கு மேலும் ரூ.480 உயர்ந்து ரூ.62,320-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

வார தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.7,705-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கும் விற்பனையானது.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை!

புதிய உச்சத்தில் தங்கம் விலை

இந்த நிலையில், இன்று(பிப். 4) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து ரூ. 7810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மெக்சிகோ, சீனா, கனடா ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டதும் மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாததாலும் தங்கம் விலை உயர்ந்து வருவதாக தங்க நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளி விலை குறைவு

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 106-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1,06,000-க்கும் விற்பனையாகிறது.

காலநிலை மாற்ற கையேடு அரசால் வெளியிடப்படும்: முதல்வர்

காலநிலை மாற்ற கையேடு அரசால் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: நக்சல்களால் 2 இளைஞர்கள் படுகொலை!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாநிலத்தில் நக்சல்களினால் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.பிஜப்பூரின் புக்டிசேரு கிராமத்தில் கரம் ராஜு (வயது 32) மற்றும் மாதவி முன்னா (27) ஆகிய இரண்டு இளைஞர்கள் நேற்று (பிப்.... மேலும் பார்க்க

கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தேவின் அக்கா டீசர்!

நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இருவரும் இணைந்து நடிக்கும் அக்கா வெப் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், ... மேலும் பார்க்க

குஜராத்: பாஜக எம்.எல்.ஏ. காலமானார்!

குஜராத் மாநிலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உடல் நலக்குறைவால் காலமானார்.பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் காடி சட்டமன்ற உறுப்பினரான கர்ஷன்பாய் சோலன்கீ (வயது 68), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அஹமதாபாத்தில... மேலும் பார்க்க

காவல்துறையினர் மிரட்டிப் பணம் பறித்ததாக இளைஞர் தற்கொலை!

பென்னாகரம்: காவல்துறையினர் மிரட்டிப் பணம் பறித்ததாக இளைஞர் தற்கொலை கொண்ட நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இளைஞர் ஒருவரிடம் பென்னாகரம் அருகே காவல்துறையினர், தனியார் விடு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை!

மதுரை: திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதித்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை சமூக வலை... மேலும் பார்க்க