கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தேவின் அக்கா டீசர்!
நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இருவரும் இணைந்து நடிக்கும் அக்கா வெப் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
முன்னதாக கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார்.
இவர் நாயகியாக நடித்த ரகு தாத்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: தெலுங்கு கபாலி படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தற்கொலை?
இந்த நிலையில், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் புதிய வெப் தொடரில் நடிக்கின்றனர். இந்த வெப் தொடருக்கு அக்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
திரில்லர் பாணியில் எடுக்கப்படும் இந்த வெப் தொடரை ஒய்ஆர்எஃப் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இத்தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தாண்டு வெளியாகவுள்ளது.
அக்கா இணையத் தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.