America: ``ட்ரம்பா - எலான் மஸ்கா" அமெரிக்காவின் அதிபர் யார்? - விமர்சனங்களும் பி...
தந்தையின் இறுதி சடங்கில் மோதல்! சடலத்தை இரண்டாக பிரிக்கக் கோரிய மூத்த மகன்!
மத்தியப் பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கில் ஏற்பட்ட மோதலில் அவரது உடலை மூத்த மகன் இரண்டாக பிரிக்கக் கோரிக்கை விடுத்தார்.
திகம்காரின் லிதோராட்டால் கிராமத்தைச் சேர்ந்த தயானி சிங் கோஷ் (வயது 84), நீண்ட நாள்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவரது இளைய மகனான தாமோதர் சிங் என்பவருடன் வசித்து வந்த நிலையில், கடந்த பிப்.2 அன்று காலமானார்.
இந்நிலையில், அவரது இறுதி சடங்கு செய்வது குறித்து தாமோதருக்கும் அவரது மூத்த சகோதரரான கிஷன் சிங் என்பவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. மூத்த மகனான கிஷன் தனக்கு தான் இறுதி சடங்கு செய்யும் உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.
ஆனால், தயானி சிங் தனது இளைய மகனான தாமோதரர் தான் தனக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என ஆசைப்பட்டதாக தாமோதரன் கூறியுள்ளார். இதனால், சகோதரர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தேர்தல் விதிமீறல்: தில்லி முதல்வர் மீது வழக்குப்பதிவு!
இந்த வாக்குவாதம் தொடர்ந்தபோது குடிபோதையில் இருந்த கிஷன் தங்களது தந்தையின் உடலை இரண்டாக வெட்டி இருவரும் தனித்தனியாக இறுதி சடங்கு செய்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இந்த கோரிக்கையால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர், அவரது ஊர் மக்கள் மற்றும் உறவினர்களுடன் விசாரணை நடத்திய போலீஸார் தயானி சிங்கின் இறுதி காலத்தில் அவரை கவனித்துக்கொண்ட அவரது இளைய மகானான தாமோதரருக்கு இறுதி சடங்கு செய்யும் உரிமையை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, அவரது தந்தையின் இறுதி சடங்குகளை தாமோதரர் மேற்கொள்ள, அதற்கு ஒத்துழைக்குமாறு கிஷனுக்கு அறிவுறுத்தப்பட்டது. குடிபோதையில் இருந்த மூத்த மகனின் இந்த செயலினால் அவர்களது கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.