கடலூர்: ``மரங்களை வெட்டி வீழ்த்துவது கண்டிக்கத்தக்கது!'' – பாமக தலைவர் அன்புமணி ...
பிப். 16, 25ல் ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு!
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப். 16, 25 ஆகிய தேதிகளில் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ கூறியுள்ளது.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், காலலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிக்க | 'அங்கன்வாடியில் உப்புமா வேண்டாம்; பிரியாணி, சிக்கன் வேண்டும்' - சிறுவனுக்கு அமைச்சர் பதில்!
இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாணை 243-யை ரத்து செய்தல், காலி இடங்களை நிரப்புதல் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப். 16, 25 ஆகிய தேதிகளில் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
பிப் . 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டமும் பிப். 25 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் போராட்டமும் நடைபெறும் என்று கூறியுள்ளது.