செய்திகள் :

கடலூர்: ``மரங்களை வெட்டி வீழ்த்துவது கண்டிக்கத்தக்கது!'' – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டம்

post image

தைப்பூசத்தையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது இந்து சமய அறநிலையத்துறை. அப்போது பெருவெளியில் இருக்கும் மரங்கள் வெட்டப்படுவதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

இதுகுறித்து பா.ம.க தலைவர் அன்புமணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், `வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளியைச் சுற்றி நன்கு வளர்ந்த நிலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மரங்களை, இராட்சத எந்திரங்களைக் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். 

பெருவெளி பகுதியில் நிழல் தரும் வகையில்  வளர்ந்திருந்த அந்த மரங்கள், காரணமே இல்லாமல் வெட்டி வீழ்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது. பிப்ரவரி 11-ம் தேதி தைப்பூச பெருவிழா நடைபெற உள்ள நிலையில், அடிப்படை வசதிகளை செய்வதற்காகத்தான் மரங்கள் பிடுங்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை கூறுவதை ஏற்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசப் பெருவிழா கொண்டாடப்படும் நிலையில் எந்த ஆண்டும் இது போல் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதில்லை.

வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபை

அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு மட்டும் மரங்களை வெட்ட வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது ? 10 முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினாலும், இடையூறு இல்லாமல் ஜோதி தரிசனம் காண்பதற்கு வசதியாகத்தான் பெருவெளியில் எந்த ஆக்கிரமிப்பும் செய்யக் கூடாது என்று வள்ளலாரே கூறியிருக்கிறார். அதன்படியே இதுவரை பராமரிக்கப்பட்டும் வந்தது. அந்த  பெருவெளியை  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்காக ஆக்கிரமித்து விட்டு, கூடுதல் வசதிகளை செய்து தருவதாகக் கூறி மரங்களை அகற்றுவது முரண்பாடுகளின் உச்சம்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியதாக வள்ளலார் கூறியிருக்கிறார். அவரது நிலத்தில் வளர்ந்திருந்த மரங்களை வெட்டி வீழ்த்துவது  வள்ளலாரால் வெறுக்கப்பட்ட உயிர்க்கொலை ஆகும்.  வள்ளலாரை மதிக்கும் அரசாக இருந்தால்  சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதை  உடனடியாக நிறுத்த வேண்டும்; அந்தப் பகுதியில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

LGBTQIA: ``பாலின அடையாளக் கோளாறு'' -விமர்சித்த மருத்துவ ஆணையம்; கண்டனம் தெரிவித்த உயர்நீதி மன்றம்!

LGBTQIA+ சமூகத்தினரை 'பாலின அடையாளக் கோளாறு' உள்ளவர்கள் என்று தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட, அது தற்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. தன்பாலின ஈர்ப்பு சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: நீதிமன்ற அனுமதியுடன் மதுரையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்..

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக இந்து முன்னணி ஆர்பாட்டம் நடத்த உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை சில நிபந்தனைகளுடன் உத்தரவிட்டுள்ளது.திருப்பரங்குன்றம்சில மாதங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் மலை மீ... மேலும் பார்க்க

America: ``ட்ரம்பா - எலான் மஸ்கா" அமெரிக்காவின் அதிபர் யார்? - விமர்சனங்களும் பின்னணியும்!

எலான் மஸ்க் - டொனால்ட் ட்ரம்ப் நட்புஉலகளவில் கவனிக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தல். ஆரம்பத்தில் ஜோ பைடனா - டொனால்ட் ட்ரம்ப்பா என்றுத் தொடங்கிய தேர்தல் களம், ஜோ பைடனிடமிருந்து கமலா ஹ... மேலும் பார்க்க

``மாலை 6 மணிக்கு பிறகு 76 லட்சம் பேர் வாக்களித்தது எப்படி?'' -தேர்தல் கமிஷனிடம் ஐகோர்ட் கேள்வி

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால், இந்த வெற்றியை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. தேர்தலில... மேலும் பார்க்க

``மனநிலை பாதிப்பு... விஜய்யின் வளர்ச்சி சீமானுக்கு புடிக்கல..'' -சீமானை சாடிய புகழேந்தி

விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் புகழேந்தி தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்... மேலும் பார்க்க

Point Nemo: நெருங்க முடியாத கடல் துருவத்தை கடந்து சாதனை படைத்த இந்திய கடற்படை வீராங்கனைகள்..!

பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது பாயிண்ட் நெமோ (Point Nemo) பகுதி. இது யாரும் நெருங்க முடியாத கடல் துருவமாகும். மக்கள் வசிக்கும் நிலப்பரப்பிலிருந்து சுமார் 2,688 கிலோமீட்டர் தொலைவில் அம... மேலும் பார்க்க