வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்
ரீல்ஸிலிருந்து சினிமாவுக்கு வந்த சகோதரிகள்..!
இன்ஸ்டாவில் நடனமாடி புகழ்பெற்ற சகோதரிகள் விக்ராந்த்துடன் சினிமாவிலும் நடனமாடியுள்ளார்கள்.
அக்கா, தங்கையான பிரியா துரைசாமி, திவ்யதர்ஷினி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் நடனத்தில் மூலம் பிரபலமானவர்கள்.
நடனத்தில் பட்டையைக் கிளப்பும் இவர்கள் நடிகர்கள் கௌதம் கார்த்தி, ராகவா லாரன்ஸ், அசோக் செல்வனுடன் இணைந்து பட புரமோஷனுக்காக நடனம் ஆடியிருந்தார்கள்.
இந்த நிலையில் நடிகர் விக்ராந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள வில் படத்தில் டெஸ்லா என்ற பாடலில் நடனமாடியுள்ளார்கள்.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரியா துரைசாமி, “ நீண்டநாள் காத்திருப்பு வந்துவிட்டது. வில் என்ற படத்தில் விக்ராந்த் சாருடன் டெஸ்லா எனும் பாடலில் முதன்மை டேன்ஸ்ராக நடனமாடியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
ஃபுட்ஸ்டெப் புரடக்ஷன் தயாரிப்பில் சிவராமன் எழுதி இயக்கியுள்ள இந்த ‘வில்’ படத்தில் சோனியா அகர்வால், அலெக்யா காடம்போனியா, சஞ்சனா நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்துக்கு சௌரப் அகர்வால் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஃபுட்ஸ்டெப் புரடக்ஷன் தயாரிப்பின் 5ஆவது படமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகை மடோனா செபாஸ்டியன் வெளியிட்டார்.
இன்ஸ்டாகிராமில் இருந்து பலர் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை திவ்யபாரதியும் இப்படித்தான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.