செய்திகள் :

வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்

post image

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடர் முழுவதுமே இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தனர்.

இதையும் படிக்க: விராட் கோலி, ரோஹித் சர்மா ரோபோக்கள் அல்ல; முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு!

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

கெவின் பீட்டர்சன் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஏனெனில், அவர்கள் களத்தில் நீண்ட நேரம் செலவழித்து ஆட முடியும். ஒருநாள் போட்டிகள் நீண்ட வடிவிலானவை என்பதால் அனைத்துப் பந்துகளையும் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதில்லை. இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளது மிகச் சிறந்த முடிவு என நினைக்கிறேன் என்றார்.

இதையும் படிக்க:சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி, ரோஹித் சர்மா ரோபோக்கள் அல்ல; முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு!

விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ரோபோக்கள் அல்ல என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந... மேலும் பார்க்க

ஜாக்ஸ் காலிஸ்தான் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட்டர்..! ரிக்கி பாண்டிங் புகழாரம்!

தி ஹைவி கேம்ஸ் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிக்கி பாண்டிங் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ்தான் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட்டரென புகழ்ந்து பேசியுள்ளார்.இந்தியாவின் நட்சத... மேலும் பார்க்க

ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டிகளை தவறவிடும் இங்கிலாந்து வீரர்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் தவறவிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில... மேலும் பார்க்க

ஒரு டெஸ்ட் தொடர் இழப்பு ஒட்டுமொத்த அணியின் ஃபார்மை தீர்மானிக்காது: ஷுப்மன் கில்

ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது ஒட்டுமொத்த அணியின் ஃபார்மினை தீர்மானிக்காது என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெ... மேலும் பார்க்க

சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அண்மை... மேலும் பார்க்க

பும்ராவின் கொடுங்கனவு, 10 வீரர்களுடன் வென்ற ஆஸி..! கலகலப்பாக பேசிய மார்ஷ்!

ஆலன் பார்டர் விருது விழாவில் பங்கேற்ற ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் பேசியது வைரலாகி வருகிறது. 2025ஆம் ஆண்டுக்கான ஆலன் பார்டர் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக ட... மேலும் பார்க்க