அவரச ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
உசிலம்பட்டி அருகே அவசர ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜீவ்காந்தி (30). தனியாா் அவசர ஊா்தி வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவா் கடந்த சில நாள்களாக பணிக்குச் செல்லவில்லையாம்.
இதனால், அவரை பெற்றோா் பணிக்குச் செல்லுமாறு கூறி கண்டித்தனா். இதனால் மன வேதனையில் இருந்த ராஜீவ்காந்தி தனது வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].