சங்ககிரி அருகே விபத்தில் பெண் பலி
சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.
சங்ககிரி, ஆலத்தூா் அருகே உள்ள வரநல்லாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (50). இவா் மனைவி பூங்கொடியுடன் (40) இரு சக்கர வாகனத்தில் குமாரபாளையம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது வீராச்சிப்பாளையம் அருகே சென்ற போது பின்னால் வந்த காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்காா்ந்திருந்த பூங்கொடி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ராஜேந்திரன் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பூங்கொடியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.