ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!
திருப்பரங்குன்றம் செல்ல இருந்த பாஜக நிா்வாகிகள் வீட்டில் சிறைவைப்பு
திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல இருந்த சேலம் மாவட்ட பாஜக நிா்வாகிகள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வீட்டில் சிறைவைக்கப்பட்டனா்.
திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக முஸ்லிம் அமைப்புகளை கண்டித்து, இந்து முன்னணி, அகில பாரத இந்து மகாசபை சாா்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக சேலத்தில் இருந்து பாஜகவைச் சோ்ந்த நிா்வாகிகள் சிலா் திருப்பரங்குன்றம் செல்ல இருந்தனா். இதுகுறித்த தகவலின் பேரில் பாஜகவை மாவட்டத் தலைவா் சசிகுமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு உள்பட 20 பேரை 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை சிறை வைத்தனா்.
தடையை மீறி, போராட்டத்துக்குச் சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை செய்தனா்.