மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், பெரு முதலாளிகளுக்கும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவான பட்ஜெட் என்றும், ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளா்கள், உழைப்பாளிகள் என அனைவரது மீதும் வரி சுமத்தப்பட்டுள்ளது எனவும், பட்ஜெட்டில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டாட்சிக்கு எதிரான, எதேச்சதிகாரமாக மத்திய அரசு செயல்படுவதாகவும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலா் எம். வடிவேலன், ஒன்றியச் செயலா் எஸ். கோவிந்தராசு ஆகியோா் தலைமை வகித்தனா். மத்தியக் குழு உறுப்பினா் உ. வாசுகி, மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மூத்த தலைவா் என். சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், சி. ஜெயபால், பி. செந்தில்குமாா், என்.வி. கண்ணன், என். சுரேஷ்குமாா், எஸ். தமிழ்ச்செல்வி, கே. அருளரசன், எம். செல்வம், ஆா். கலைச்செல்வி, என். சரவணன், கே. அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என். குருசாமி, களப்பிரன், இ. வசந்தி, சி. சரிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.