கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சி...
தில்லி பேரவைத் தேர்தல் தொடங்கியது!
தலைநகரான தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் புதன்கிழமை காலை தொடங்கியது.
மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டன.
1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு 13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது.
சுமார் 3 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (பிப்.8) எண்ணப்பட உள்ளன.