செய்திகள் :

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

post image

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் இந்தியா தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மூன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றிய வருகின்றனர்.

இங்கு பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு இறுதியில் 1,500-க்கும் அதிகமான தொழிலாளா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். 36 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

இதையும் படிக்க |தங்கத்தில் இப்போது முதலீடு சாத்தியமா?

இதையடுத்து ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, அக்.17 (வியாழக்கிழமை) மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

இந்த நிலையில் தொழிற்சங்கத்தை பதிவு செய்யாத தொழிலாளர் நலத்துறையை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி சிஐடியு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான மோகன்ராஜ் சிவனேசன் குணசேகரன் மூன்று பேரை சாம்சங் நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது.

அனைத்து தொடர்ந்து தற்போது சிஐடியு தொழிற்சங்கத்தில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தற்போது சாம்சங் நிறுவனத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

விமானப் படையின் மகா கும்பமேளா இது: விமான கண்காட்சியை துவக்கி வைத்த ராஜ்நாத்!

பெங்களூருவில் ஏரோ இந்தியா - 2025 விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியை இன்று (பிப்.10) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.ஏரோ இந்தியா கண்காட்சியில் வெளிநாடுகளைச் சோ்ந... மேலும் பார்க்க

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டார். மேலும் பார்க்க

தனம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

நடிகை சத்யா மற்றும் ஸ்ரீகுமார் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் ‘தனம்’ தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சத்யா. தற்போது சன் ... மேலும் பார்க்க

அதிமுக பலவீனம் அடையக் கூடாது: திருமாவளவன்

அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பா... மேலும் பார்க்க

தில்லி தோ்தல் முடிவுகள் பிகார் தேர்தலில் எதிரொலிக்காது: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக பெற்றிருக்கும் வெற்றி, இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ராஷ்ட்ரீய ஜ... மேலும் பார்க்க

"பிஜாப்பூரில் மிகப்பெரிய வெற்றி": பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு

புதுதில்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்காக பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்துள்... மேலும் பார்க்க