செய்திகள் :

மணிப்பூர் இனக் கலவரத்திற்கு மோடி, அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும்! - கனிமொழி

post image

மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்திற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கடந்த இரண்டு ஆண்டு காலமாக மணிப்பூரில் கும்பல் வன்முறைகளைத் தூண்டிவிட்டு, ஏராளமான மனித உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த பிரேன் சிங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

குறிப்பாக மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்புள்ள முதலமைச்சர், அதற்கு மாறாக கும்பல் வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கான சாட்சியங்கள் உச்சநீதிமன்ற விசாரணையில் வெளிப்பட்டுள்ளன.

சிறுபான்மைப் பிரிவினர் மீது வெறுப்புணர்வோடு பேசிய ஒலிப்பதிவு அம்பலப்பட்டு, அதன் உண்மைத்தன்மை வெளிப்பட்டுள்ள நிலையில் பிரேன்சிங் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

பிரேன் சிங் ராஜிநாமா வெகு நாள்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது: பிரியங்கா!

பிரேன் சிங் முதல்வராகத் தொடர எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணிக் கட்சியினரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தந்த அழுத்தமும் இந்த பதவி விலகலுக்கு காரணமாகியிருக்கின்றன.

மணிப்பூர் கலவரங்கள் தொடங்கியது முதலே பிரேன் சிங் பதவி விலக வேண்டும், மோடியும் அமித் ஷாவும் மணிப்பூரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன. மணிப்பூர் மக்கள் மிகப்பெரிய துயரத்திற்கு ஆளாகி வந்தார்கள். தற்போதும் நிலை மேம்பட்டதாகத் தெரியவில்லை.

மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் 220-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன, 60,000 -க்கம் மேற்பட்ட மக்கள் மாநிலத்தை விட்டு புலம்பெயர்ந்த அவலம் ஏற்பட்டது. அரசின் நிவராண முகாம்களில் தங்கியிருந்தவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள், பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளானார்கள். அரசின் ஆதரவிலும் பாராமுகத்திலும்தான் இந்த கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. அப்போதும் மத்திய பாஜக அரசும், மணிப்பூர் பாஜக முதல்வர் பிரேன் சிங்கும் வேடிக்கைதான் பார்த்தார்கள்.

மக்களைப் பிளவுபடுத்தி அவர்களின் மரணத்தின் மீது ஆட்சி செய்யும் பாஜகவின் பாசிச அரசியலுக்கு மணிப்பூரே சாட்சி. பிரேன் சிங் மட்டுமல்ல அவரைப் பாதுகாத்து கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

அடுத்து யார் முதல்வராக பதவி ஏற்றாலும் அவர்கள் அந்த மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.

இனியாவது பாஜக அரசு திருந்தி மணிப்பூர் மக்களிடம் அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். மணிப்பூரில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை விசாரிக்க நடுநிலையான ஆன தனி ஆணையத்தை அமைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க | பொங்கல் தொகுப்பில் ஊழல்: அமைச்சர் காந்தி பதவி விலக வேண்டும்! - அண்ணாமலை

மகா கும்பமேளாவில் பிறந்த 12 குழந்தைகள்!

மகா கும்பமேளாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இதுவரை 12 குழந்தைகள் பிறந்துள்ளன. இக்குழந்தைகளுக்கு கும்ப், கங்கை, ஜமுனா, சரஸ்வதி, வசந்த், வசந்தி என கும்பமேளாவுக்குத் தொடா்புடைய பெயா்கள் சூட்டப... மேலும் பார்க்க

அமெரிக்க அரசிடம் நிதியுதவி பெற்ற இந்தியா நிறுவனங்கள் மீது விசாரணை: மக்களவையில் பாஜக எம்.பி. கோரிக்கை!

அமெரிக்க அரசு நிதியுதவி பெற்று இந்தியாவில் அமைதியைச் சீா்குலைக்கும் நோக்கில் செயல்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கோரிக்கை முன்வை... மேலும் பார்க்க

‘இந்தியா’ கூட்டணியில் மோதல் வேண்டாம்: சிவசேனை கட்சி அழைப்பு

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவால் எழுந்துள்ள சவால்களை எதிா்கொள்ள வேண்டும். எதிா்க்கட்சிகள் தங்களுக்குள் மோதலில் ஈடுபடுவது எந்த வகையிலும் யாருக்கும் உதவாது என்று சிவசேன... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினாா் குடியரசுத் தலைவா்!

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு திங்கள்கிழமை வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபட்டாா். இந்தி... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் நோயால் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பதால் மகாராஷ்டிரத்தில் மக்களிடையே அச்சம் குடிகொண்டுள்ளது. புணே நகரில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 37 வயது ... மேலும் பார்க்க

தில்லி அரசியலை மையமாக வைத்து மத்திய பட்ஜெட்: ப. சிதம்பரம்

தில்லி அரசியலை மையமாக வைத்து மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார். பட்ஜெட் தயாரிப்பின்போது ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை மத்... மேலும் பார்க்க