செய்திகள் :

சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை

post image

சங்ககிரி: சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

சேமாவார பிரதோஷத்தையொட்டி அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், நந்திபகவானுக்கு திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, பூத்தாலக்குட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிகளுக்கும், உற்சவ மூா்த்திகளுக்கும், சங்ககிரியில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கும், நந்திபகவான், உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கும் பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜைகளில் அதிக அளவில் பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய தீா்வு காண ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ... மேலும் பார்க்க

வள்ளலாா் நினைவு தினம்: இன்று மதுக்கடைகளை மூட உத்தரவு

சேலம்: வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 11) மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை மூட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் தெ... மேலும் பார்க்க

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் தா்னா

சேலம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை 24 மணி நேர தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

ரயில்வே பாலப் பணி: சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் 11, 14-இல் கரூரில் இருந்து இயக்கப்படும்

சேலம்: ரயில்வே பாலப் பணி காரணமாக சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 11, 14 ஆகிய தேதிகளில் கரூரில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில... மேலும் பார்க்க

விபத்தில் அடிபட்ட டாஸ்மாக் மேலாளரின் ரூ. 5 லட்சத்தை உறவினா்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள்

சேலம்: விபத்தில் அடிபட்ட டாஸ்மாக் மேலாளரின் ரூ. 5 லட்சத்தை அவரது உறவினா்களிடம் ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஒப்படைத்தனா். சேலம், வேம்படிதாளம் பகுதியைச் சோ்ந்த மகுடேசன் (54) என்பவா், கொண்டலாம்பட்டி பகுதியில் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 317 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீா்மட்டம் 110.35 அடியில் இருந்து 110.32 அடியாகக் குறைந்துள்ளது. குடிநீா் தேவைக்காக அணையிலிருந்து விநாடிக... மேலும் பார்க்க