திருப்பரங்குன்றம்: `இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக?' - சீமான் க...
Dragon : `தனுஷ் சார் கூட போட்டியெல்லாம் இல்ல...' - டிராகன் குறித்து பிரதீப் ரங்கநாதன்
'ஓ மை கடவுளே' திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'டிராகன்'.
இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், யூடியூப் பிரபலங்களான வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். காலேஜில் ஜாலியாக, கெத்தாக சுற்றித் திரியும் இளைஞர் வாழ்க்கையின் காதல், பிரேக் அப், கரியர், குடும்பத்தின் நிலை பற்றி ஜாலியாகப் பேசும் இத்திரைப்படம் பிப் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையொட்டி நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசியிருக்கும் பிரதீப் ரங்கநாதன், "தனுஷ் சாரோட 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் பிப் 21ம் தேதி ரிலீஸ் ஆகுது.
அதே நாளில் எங்களோட 'டிராகன்' படமும் ரிலீஸ் ஆகுது. தனுஷ் சார் கூட போட்டி போட அதே தேதியில ரிலீஸ் பண்ணல. அஜித் சாரோட 'விடாமுயற்சி' பிப் 6ம் தேதி ரிலீஸ்.
அதுனால அன்னைக்கு ரிலீஸ் பண்ண முடியல. அதுக்கு அடுத்த வாரமான பிப் 21ம் தேதி நல்ல வரவேற்பு கிடைக்கும்னு எங்க படத்தை ரிலீஸ் பண்றோம். தனுஷ் சாரும் அப்படித்தான் யோசிச்சு இருப்பார். மற்றபடி நாங்க தனுஷ் சார் கூட போட்டிபோட நினைக்கல.
பெரிய ஹிட் படம் கொடுத்த 'ஓ மை கடவுளே' படத்தோட இயக்குநர் இந்தப் படத்த இயக்கியிருக்கிறார். அவரோட அடுத்தப் படத்துல நான் நடிச்சிருக்கேன். இயக்குநர் என்னோட 10 வருஷ நண்பர் என்பெதெல்லாம் அதுக்கப்புறம்... அதுவாக அமைஞ்சது. நாங்க தொழிலையும், நட்பையும் போட்டுக் குழப்பிக்க மாட்டோம்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...