செய்திகள் :

பிசிஓஎஸ் பிரச்னை இருந்தால் கருத்தரிக்க முடியாதா? - நம்பிக்கையும் உண்மையும்!

post image

பெண்களுக்கு பிசிஓஎஸ் எனும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்னை இருந்தால் கருத்தரிக்க முடியாதா? ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால் பிசிஓஎஸ் என்று அர்த்தமா?

இதுபோன்று பிசிஓஎஸ் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு விளக்கமளிக்கிறார் புவனேஸ்வரத்தின் மணிபால் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஹர்ப்ரீத் கௌர்.

தவறான நம்பிக்கைகளும் உண்மையும்

சினைப்பை நீர்க்கட்டிகள் இருந்தால், அவருக்கு பிசிஓஎஸ்(PCOS) எனும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் குறைபாடு உள்ளது.

பிசிஓஎஸ் குறைபாடு உள்ள பல பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதில்லை. அதாவது நீர்க்கட்டிகள் இருந்தாலே பிசிஓஎஸ் குறைபாடு இருப்பதாக அர்த்தமல்ல.

அதிகப்படியான ஆண்ட்ரோஜன் சுரப்பு (முகங்களில் முடி, முகப்பரு, முடி உதிர்தல் ஆகிய அறிகுறிகள்), ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தாலும் பிசிஓஎஸ் பிரச்னை இருக்கும். இத்துடன் சினைப்பை நீர்க்கட்டிகளும் இருக்கலாம்.

இதையும் படிக்க | ஆன்லைனில் அதிக நேரம் உள்ள குழந்தைகளுக்கு 'மூளைச் செயல்திறன் குறைவு' - அறிகுறிகள், காரணங்கள்?

ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தாலே அது பிசிஓஎஸ் குறைபாடு ஆகும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு பல காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களில் பிசிஓஎஸ் என்பது ஒரு காரணம் மட்டுமே. மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாள்கள் வரை இருக்கலாம். தைராய்டு கோளாறுகள், புரோலாக்டின் சுரப்பில் பிரச்னைகள், கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள்(ஃபைப்ராய்டுகள்), தாய்ப்பால் சுரப்பு, அதிகப்படியான டயட் அல்லது உடல் பருமன் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

பிசிஓஎஸ் இருந்தால் கர்ப்பமாக முடியாது

பிசிஓஎஸ் என்பது கருவுறாமைக்கு ஒரு பொதுவான காரணம். இந்த ஹார்மோன் பிரச்னை, கருவுறுவதற்கு முட்டையை வெளியிடும் சினைப்பையின்(ovary) திறனைப் பாதிக்கிறது. ஆனால், இயற்கையாகவும் கருத்தரித்தல் நிகழ வாய்ப்புள்ளது. சிலர் மருந்துகளைப் பயன்படுத்தியும் கருத்தரிக்கலாம்.

இதையும் படிக்க | காலையில் எழுந்தவுடன் சாப்பிட வேண்டிய 10 புரத உணவுகள்!

காலையில் எழுந்தவுடன் சாப்பிட வேண்டிய 10 புரத உணவுகள்!

உடலுக்குத் தேவையான சத்துக்களில் மிகவும் அத்தியாவசியமானது புரதச்சத்து. புரதங்கள், அமினோ அமிலங்களால் ஆனவை. சுமார் 20 வெவ்வேறு அமினோ அமிலங்கள் இருப்பதாகவும் இவை தசை, எலும்புகள் உருவாக்கம் மற்றும் ஆரோக்கி... மேலும் பார்க்க