தனியார் கிடங்கிலிருந்து 400 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்!
இந்தூர்: இந்தூர் நிர்வாகமானது தனியார் கிடங்கிலிருந்து சுமார் 400 குவிண்டால் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள கிடங்கில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டு, குஜராத்துக்கு அனுப்புவதற்காக லாரிகளில் ஏற்றப்பட உள்ள நிலையில் கைப்பற்றப்பட்டது என்று மாவட்ட உணவு மற்றும் வழங்கல் கட்டுப்பாட்டாளர் எம்.எல். மாரு தெரிவித்தார். இதனையடுத்து கிடங்கு சீல் வைக்கப்பட்டது. இந்த அரிசியானது பொது விநியோக திட்ட பயனாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பயனாளிகளிடமிருந்து ரேஷன் அரிசியை கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.16 வரை வாங்கி, இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்வதாக நாங்கள் அறிந்தோம். இடைத்தரகர்கள் கிலோ ஒன்றுக்கு ரூ.22 முதல் ரூ.23 வரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்த நிலையில் அவர்கள் கிலோவுக்கு ரூ.27 வரை விற்பனை செய்தனர்.
இந்த மோசடியில் சதீஷ் அகர்வால் மற்றும் ஐந்து பேர் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக மாரு தெரிவித்தார். சதீஷ் அகர்வாலுக்கு இதற்கு முன்பு மூன்று முறை அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்கவும்: இந்திய பங்குச் சந்தையில் கடந்த 5 நாட்களில் ரூ.16.97 லட்சம் கோடி இழப்பு!