லோகேஷ் பிறந்த நாளில் கூலி டீசர்?
கூலி திரைப்படத்தின் டீசர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாகிர், ஷ்ருதி ஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்ததுள்ளது. இதில், குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.
இதையும் படிக்க: ரசிகரை அடித்த பிரபல நடிகை!
கூலி படத்தின் டீசர் மற்றும் புதிய போஸ்டர்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி கேட்டுவரும் நிலையில், இப்படத்தின் டீசர் அல்லது கிளிம்ஸ் விடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளான மார்ச் 14 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் - 2 படப்பிடிப்பும் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.