செய்திகள் :

மறுசீரமைப்பு: தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் 8 தொகுதிகள் வரை இழக்க வாய்ப்பு காங்கிரஸ்

post image

புது தில்லி: ‘மத்திய அரசு திட்டமிட்டுள்ளபடி, மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதாக அமையும். இதனால் தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் ஒன்றுமுதல் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும்’ என்று காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் அண்மையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ‘மக்களவையில் தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது’ என்று வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்த நடைமுறையை எதிா்த்துப் போராட கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைய கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப், ஒடிஸா ஆகிய ஏழு மாநிலங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா். நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை எதிா்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் எந்தெந்த மாநிலங்களுக்கு பாதிப்பு, எவையெல்லாம் பலன்பெறும் என்பதை காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் விளக்கியுள்ளாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் ஒன்றுமுதல் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும். அதே நேரம், உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் 10 முதல் 11 மக்களவைத் தொகுதிகளைக் கூடுதலாகப் பெற வாய்ப்புள்ளது.

மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்களே, தொகுதி மறுசீரமைப்பால் மக்களவைத் தொகுதிகளை இழக்கும் நிலையைச் சந்திக்கும். அந்த வகையில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்கான தண்டனையாக இது அமையும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தொகுதிகள் குறையும் மாநிலங்கள்: தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தலா 8 தொகுதிகளையும், மேற்கு வங்கம் 4, ஒடிஸா 3, கா்நாடகம் 2, ஹிமாசல பிரதேசம் 1, பஞ்சாப் 1, உத்தரகண்ட் 1 தொகுதியை இழக்க நேரிடும்.

தொகுதிகள் கூடும் மாநிலங்கள்: உத்தர பிரதேசத்தில் 11, பிகாரில் 10, ராஜஸ்தானில் 6, மத்திய பிரதேசத்தில் 4 தொகுதிகள் அதிகரிக்கும். ஜாா்க்கண்ட், ஹரியாணா, குஜராத், தில்லி, சத்தீஸ்கரில் தலா ஒரு தொகுதி அதிகரிக்கும்.

அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீா், மகாராஷ்டிரம் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கையில் இழப்போ அல்லது பலனோ இருக்காது என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

இந்தியாவின் முக்கியக் கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி

மோரீஷஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை பயணத்தின்போது, 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.மோரீஷஸ் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சென்றிருக்கிறார். இந்த சந்திப்பி... மேலும் பார்க்க

மியான்மர் ஆன்லைன் மோசடி மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடி மையங்களில் சிக்கி விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர... மேலும் பார்க்க

3 நாள் சுற்றுப்பயணமாக அஸ்ஸாம் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 14ல் மூன்று நாள் பயணமாக அஸ்ஸாம் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கோக்ரஜாரில் உள்ள அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில்... மேலும் பார்க்க

வரியில்லாத புதுச்சேரி பட்ஜெட்: முதல்வர் என். ரங்கசாமி

புதுச்சேரியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமையில் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார். இந்த ரூ. 13,600 கோடி பட்ஜெட்டை வரியில்லாத பட்ஜெட் என்றும் கூறினார்.மேலும... மேலும் பார்க்க

மருத்துவமனையில் இருந்து ஜகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) புதன்கிழமை காலை வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீர் நெஞ்சு வலி காரணமாக மார்ச் 9-ஆம் தேதி நள்... மேலும் பார்க்க

எலான் மஸ்க்குடன் ஒப்பந்தம்: ஏர்டெல், ஜியோ பங்குகள் உயர்வு!

ஸ்பேஸ்எக்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளின் விலை அதிகரித்துள்ளன.அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அள... மேலும் பார்க்க