பெரியார் சர்ச்சை: மத்திய நிதி அமைச்சருக்கு எதிராக விஜய் கேள்வி!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 ஆக அதிகரிப்பு- புதுச்சேரி பட்ஜெட் சிறப்பம்சம்!!
புதுச்சேரி மாநிலத்தில், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உதவித் தொகை ரூ.1,000, தற்போது ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ரூ.13,600 கோடிக்கான பட்ஜெட்டை இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.
இதில் புதுச்சேரியில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்த்தி அறிவித்தார்.
பள்ளிகளில் அனைத்து நாள்களிலும் மதிய உணவில் முட்டை வழங்கப்படும் எனவும் அறிவிப்பினை வெளியிட்டார்.
குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2 கிலோ கோதுமை வழங்கப்படும் என வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்த அவர், அரசுக்கு தொடர் வழிகாட்டுதலுக்கும், கனிவான ஆதரவு அளித்து வரும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ரங்கசாமி நன்றி தெரிவித்தார்.
இதில், ரூ.11,624.72 கோடி வருவாய் செலவினத்திற்காகவும், ரூ.1975.28 கோடி மூலதின செலவினங்களுக்காவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில சொந்த வருவாய் - ரூ.7,441.40 கோடியும், பேரிடர் மேலாண்மை நிதி மற்றும் மத்திய அரசின் நிதி ரூ.3,432.18 கோடியும், மத்திய அரசின் சாலை நிதி ரூ.25 கோடி, மத்திய அரசின் திட்டங்களின் கீழ் ரூ.400 கோடி, ரூ.2101.42 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து தனது உரையில் அனைத்து விவசாயிகளுக்கும் மழைகால நிவாரணம் ரூ.2000 வழங்கப்படும் என்றும், வனம் மற்றும் வனம் இல்லாத பகுதிகளில் 3 லட்சம் மரக்கன்று, பள்ளிகளில் 1 லட்சம் மரக்கன்று வழங்க திட்டம்.
புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் அனைத்து அட்டைகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு வாரம் 3 நாள் வழங்கப்படும் முட்டை இனி வாரம் முழுக்க வழங்கப்படும்.
மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு 50% மானிய விலையில் வழங்கப்படும்.
மீனவ சமுதாய ஈமச்சடங்கு நிதி ரூ.15,000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
6 முதல் 12 வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி (இளநிலை கல்வி) படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதத்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் வைக்கப்படும்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்தப்படும்.
திருமணம் ஆகாத 30 வயது முடிந்த ஆதிதிராவிடர் பழங்குடியின பெண்களுக்கு மீதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும்.
மாற்றுதிறனாளி ஈமச்சடங்கு நிதி ரூ.15,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
1 முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாற்றுதிறனாளி மாணவர்களின் ஆண்டு உதவித்தொகை ரூ. ஆயிரத்திலிருந்து ரூ.4000 ஆகவும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுதிறனாளி மாணவர்களின் ஆண்டு உதவித்தொகை ரூ.2000 லிருந்து ரூ.5000 ஆகவும், 9 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாற்றுதிறனாளி மாணவர்களின் ஆண்டு உதவித்தொகை ரூ.3400 லிருந்து ரூ.6400 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றத்தினாளி மாணவர்கள் உதவித்தொகை ரூ.5000 லிருந்து ரூ.8000 ஆகவும், முதுநிலை மற்றும் தொழிற்சார்ந்த படிப்புகளுக்கு உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.6800 லிருந்து ரூ.9800 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 நிதி, தில்லியை போன்று ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.