`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா... உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' - ஸ்டாலின் க...
உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து; ஒருவர் காயம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்தானதில் ஒருவர் காயமடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டனப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு பிரம்மாண்ட ஏற்பாடுகளை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக 25 அடி உயர ராட்சத கட்-அவுட்களையும் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் கட்-அவுட் ஒன்று சரிந்து விழுந்து விபத்தானது.
இதையும் படிக்க:நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிக்கியதில், அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதனையடுத்து, அனுமதியின்றி கட்-அவுட், \ஃபிளக்ஸ் வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்த கட்-அவுட் விழுந்து, விபத்தானதில் இளம்பெண் ஒருவர் பலியானதையடுத்து, திமுக நிகழ்ச்சிகளில் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது என திமுக தலைமையும் உத்தரவிட்டிருந்தது.