ஐ.எப்.எஸ்.சி துணை நிறுவனத்தில் $45 மில்லியன் முதலீடு செய்ய இண்டிகோ முடிவு!
புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன், அதன் துணை நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் பைனான்சியல் சர்வீசஸ் ஐஎஃப்எஸ்சி பிரைவேட் லிமிடெட்டில் 45 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில், இன்டர்குளோப் ஏவியேஷன்ஸ் வாரியம் இந்த முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்தது.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில், ஐ.எஃப்.எஸ்.சி துணை நிறுவனத்தில் சுமார் 45 மில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்யப்படும் என்று தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டை நிலுவையில் உள்ள கடனை திருப்பிச் செலுத்துவதற்கும் மற்றும் பிற பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று இண்டிகோ ஐ.எஃப்.எஸ்.சி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் கைகோர்த்த லூபி இண்டஸ்ட்ரீஸ்!