Indonesia: இயேசு கிறிஸ்துவை குறிப்பிட்டு பேசிய திருநங்கை TikTok பிரபலம்; சிறைத் ...
ஆரம்பத்தில் உயர்ந்தும், முடிவில் சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
மும்பை: நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இன்றைய வர்த்த தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்த நிலையில், வர்த்தக கட்டணங்கள் குறித்த உலகளாவிய போக்குகள் காரணமாக முடிவில் நேற்றைய அமர்வை விட சரிந்து முடிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது. சென்செக்ஸ் 289.83 புள்ளிகள் உயர்ந்து 74,392.15 புள்ளிகளாகவும், நிஃப்டி 79.5 புள்ளிகள் உயர்ந்து 22,577.40 புள்ளிகளாக இருந்தது. முடிவில் சென்செக்ஸ் 72.56 புள்ளிகள் சரிந்து 74,029.76 புள்ளிகளாகவும், நிஃப்டி 27.40 புள்ளிகள் சரிந்து 22,470.50 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஆக்ஸிஸ் வங்கி, டெக் மஹிந்திரா, நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ், சோமேட்டோ, பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்து முடிந்தது.
இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, அதானி போர்ட்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, என்டிபிசி மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது.
உலகளவில், கட்டணக் கொள்கைகளால் நிச்சயமற்ற தன்மையிலிருந்து எழு, சந்தைகள் பலவீனமாகவும், பதற்றமாகவும் உள்ள நிலையில், இந்த நிலை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளது.
ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து பரஸ்பர கட்டணங்கள் தொடங்குவதால் பங்குச் சந்தை மேலும் மோசமடையக்கூடும். உலக சந்தைகளில், இந்த சூழ்நிலை மீட்சியடைவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் அமெரிக்காவில் வெளியிடப்படவுள்ள மேக்ரோ பொருளாதார தரவுகளின் குறிப்புகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.
ஆசிய சந்தைகளில் டோக்கியோ மற்றும் சியோல் உயர்ந்தும் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சரிந்து முடிந்த நிலையில், வால் ஸ்ட்ரீட் நேற்று (செவ்வாய்க்கிழமை) சற்றே சரிந்து முடிந்தது.
47வது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் திரும்பியதிலிருந்து, உலகளாவிய பங்குச் சந்தைகள் நிலையற்றதாக உள்ளது. அமெரிக்க பங்குகள் 2009-க்குப் பிறகு, மிக மோசமான தொடக்கத்தை எதிர்கொன்டு வருகின்றன.
கணிக்க முடியாத வர்த்தகக் கொள்கைகள் மற்றும் மந்தநிலை அச்சங்கள் ஆகியவை நிச்சயமற்ற தன்மையைத் தூண்டுகின்றது. இந்த பீதி விற்பனைக்கு வழிவகுக்கிறது. ஏற்கனவே இந்த நிதியாண்டில் எஃப்ஐஐ-கள் ரூ.4,17,216 கோடி பங்குகளை விற்றுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.65 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 70.01 டாலராக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,823.76 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,001.79 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: 8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி