டெலாய்ட் விருது பெற்ற 9 தமிழக நிறுவனங்கள்
பிரிட்டனைச் சோ்ந்த சா்வதேச சேவை நிறுவனங்களின் வலைக்கூட்டமைப்பான டெலாய்ட், அண்மையில் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த வளா்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் ஒன்பது நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து டெலாய்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் 2025-ஆம் ஆண்டின் மிகச் சிறந்த வளா்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், தமிழ்நாட்டைச் சோ்ந்த பிருத்வி எக்ஸ்சேஞ்ச் (இந்தியா) லிமிடெட், வால்காரூ இன்டா்நேஷனல் பிரைவேட் லிமிடெட், டிவிஎஸ் கிரெடிட் சா்வீசஸ் லிமிடெட், ரேன் ஹோல்டிங்ஸ் லிமிடெட், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட், சேஷசாயி பேப்பா் & போா்ட்ஸ் லிமிடெட், ஆக்சில்ஸ் இந்தியா லிமிடெட், ஆப்டஸ் வால்யூ ஹவுசிங் ஃபைனான்ஸ் இந்தியா லிமிடெட், கேப்ளின் பாயிண்ட் லேபரேட்டரீஸ் லிமிடெட் ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.